அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமானவர் எடப்பாடி பழனிச்சாமி. தனது அரசியல் பயணத்தில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வந்துள்ளார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவர் மக்களைச் சந்திக்கும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தின் மூலம் பல வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக, எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை ‘நிறைவேற்ற முடியாதவை’ மற்றும் ‘மக்களை ஏமாற்றும் தந்திரங்கள்’ என விமர்சித்து, அவரது ஆட்சிக்காலத்தையும், தற்போதைய அறிவிப்புகளையும் கடுமையாக எதிர்க்கிறது.
எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட கல்லூரிகளை ‘சதிச்செயல்’ என விமர்சித்ததற்கு, திமுக மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்தது. கோவையில் 2025 ஜூலை 14-இல் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக கல்லூரிகளைத் திறந்ததை எடப்பாடி கேவலப்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது, எடப்பாடியின் கல்வி எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக திமுக கருதுகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி முன்வைக்கும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தின் வாக்குறுதிகளை, திமுக ‘நம்பகத்தன்மையற்றவை’ மற்றும் ‘மக்களை ஏமாற்றும் தந்திரங்கள்’ எனக் குற்றம்சாட்டுகிறது
இதையும் படிங்க: கடை விரிச்சும் வியாபாரம் ஆகலையே! இபிஎஸ் கூட்டணி அழைப்பை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்..!
இந்த நிலையில் சொந்த தொகுதி மக்களின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ் என திமுக விமர்சித்து உள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தேன் எனவும் தனது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருந்தது என்று பழனிசாமி நாள்தோறும் பேசி வருவதாக குறிப்பிட்டு உள்ளது. அவர், நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல.,தனது சொந்தத் தொகுதி மக்களுக்கு கூட வாக்குறுதிகளை நிறைவேற்றித் தராமல் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டை அதளபாதாளத்தில் கொண்டு போனார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: #2026ELECTION: பசுமை வீடு, பட்டுச்சேலை..! வாக்குறுதிகளை அள்ளி வீசிய இபிஎஸ்..!