சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி ஆவேசத்தை வெளிப்படுத்தினர். கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டிபியை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி போராடினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதால் ஆசிரியர்கள் மிகவும் ஆவேசம் அடைந்தனர். இதனிடையே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில் ஒப்புக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

திமுக அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-ஐ சந்திக்கும் தேமுதிக நிர்வாகிகள்! பிரேமலதா போடும் மாஸ்டர் ப்ளான்!
சம வேலைக்கு சம ஊதியம்" என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் என்றும் ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்..! EPS மீண்டும் பரப்புரை...!