2026 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்க அதிமுக முடிவு செய்து கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி துறை ஆட்சி தான் என்பதில் திட்டவட்டமாக கூறி வருகிறார். இருப்பினும் கோட்டாட்சியா கூட்டணி ஆட்சியா என்பதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவற்றுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அவர் கூறியிருந்தார். மேலும், தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறதா என்று கேள்விக்கு தேர்தல் உத்தி, வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மறுக்காதது அரசியல் பேசுபொருளாக மாறியது. பிரம்மாண்ட கட்சி ஒன்று அதிமுக கூட்டணி வைக்க உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். இந்த நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியில் இணையுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!
திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார். கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி இப்படி திட்டவட்டமாக பேசி வரும் நிலையில், தங்கள் தலைவர் அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று தான் கூறியிருப்பதாகவும், அவர் கூறுவதை தான் தங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார். இதனிடையே, கூட்டணி ஆட்சி என்ற விவகாரத்தில் அதிமுக பாஜக இடையே பிளவு ஏற்படும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: என் சம்பந்தி வீட்டுல ரெய்டா? அமைச்சர் நேருவுக்கு இபிஎஸ் பதிலடி...