திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், உலகிற்கே வாழ்வியல் நெறிகளைத் தந்த அய்யன் திருவள்ளுவருக்கு தனது மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாகவி பாரதியாரின் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" என்ற புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டி, தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவரைப் போற்றி வணங்கியுள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டதாவது, "தமிழ் கூறும் அறநெறிகளை, உலகப் பொதுமறையான திருக்குறள் வாயிலாக எக்காலத்திற்கும், எம்மொழியினருக்கும் பொருந்தும் வகையில் உலகுக்கு எடுத்துரைத்த மாபெரும் ஞானி அய்யன் திருவள்ளுவர். அத்தகைய சிறப்புமிக்க திருவள்ளுவர் நாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருக்குறள் சனாதன தர்மத்தின் வேர்! திருவள்ளுவர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் உயர்ந்த அறநெறிகளின் அடையாளமாகத் திகழும் திருவள்ளுவரின் போதனைகளை, இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த வாழ்த்துச் செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். ஈடு இணையற்ற திருக்குறள் காட்டிய வழியில் மக்கள் அனைவரும் அறம் சார்ந்து வாழ வேண்டும் என்பதே இவ்வேளையில் அவரது விருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும்..!! பிரதமர் மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து..!!