திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மழையில் முளைத்த நெல் மணியை பார்த்த எடப்பாடி பழனிச்சாமிடம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை என்ற குற்றம் சாட்டினார். சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து 20 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பதாக தெரிவித்தார். தற்போது நெல்மணிகள் அனைத்தும் முளைத்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாக கூறினார்.

விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூர் காட்டூரில் மட்டும் 4000 நெல் மூட்டைகள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் 7500 மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை என்று தெரிவித்தார். நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடிக்கே அல்வா... அவருக்கு தெரிஞ்ச ஒரே வேலை அது தான்! EPS- ஐ பந்தாடிய திமுக...!
அதிமுக ஆட்சியில் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் நாள் ஒன்றுக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் பொய் சொல்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!