2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார்.
கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்த எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி வழிபாடு மேற்கொண்டார். தேர்தல் பரப்புரை வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்து எதிர்க்கட்சித் தலைவர் வழிபட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு உகந்த மிருகசீரிடம் நட்சத்திர நாள் என்பதால் சென்றாய பெருமாள் கோவில் வழிபட்டுள்ளார்.
இதையும் படிங்க: பூஜைய போட்டாச்சு... 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டி இபிஎஸ் சிறப்பு வழிபாடு...!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் பரப்புரை தொடக்க விழாவில் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மாற்றம் வரும் ஆட்சி அதிகாரம் வேண்டுமென திமுக கூட்டணி கட்சிகள் கேட்க தொடங்கிவிட்டன என்றார். அதிகம் இடம், ஆட்சியில் பங்கு என திமுக கூட்டணியில் உரசல் தொடங்கி விட்டது என்று கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போடுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் இபிஎஸ்... யோசிச்சு பேசுங்க! அமைச்சர் எ.வ. வேலு பதிலடி...!