அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறப்பான முறையில் மருத்துவத் துறை செயல்பட்டு வந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நோய்வாய்ப்படும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தோல்வியையே சந்தித்துள்ளது., அந்த வகையில், இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஸ்டிக்கர் ஒட்டி முதலமைச்சர் திரு. ஸ்டாலின் திறந்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அன்று முதல் இம்மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், விடியா திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாம் அமித் ஷா சொல்லிட்டாரு... சுற்றுப்பயணத்தில் தரமான சம்பவம் இருக்கு! இபிஎஸ் பரபரப்பு பிரஸ் மீட்...

மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில், வரும் 10 ஆம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் இராமச்சந்திரன் தலைமையிலும் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக உடன்பிறப்புகள், நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கொண்டு நிர்வாகத் திறனற்ற திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்...Z+ பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு