"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தின்படி இன்று விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூர், மயிலம், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றினார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவோம் என அறிவித்து, 28 மாதங்கள் கழித்துதான் கொடுத்தார்கள், அதுவும் அதிமுக சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்திலும், ஊடகத்திலும், அறிக்கையிலும் அழுத்தம் கொடுத்தே அதனை கொடுத்தார்கள். அதே அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,500 என அறிவித்தோம். ஆனால், நீங்கள் 1,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 1,500 ரூபாயை விட்டுவிட்டீர்கள். நான் இப்போதும் சொல்கிறேன், அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மனநிறைவு படும்படி நிச்சயம் வழங்குவோம்” என பேசினார்.
குடிமராமத்து திட்டம் அற்புதமான திட்டம் அந்த திட்டத்தினை ரத்து செய்துவிட்டார்கள் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தது அரசியல் காழ்புனர்சி காரணமாக நிறுத்தி விட்டார்கள். திருமண உதவி திட்டத்தினையும் நிறுத்தி விட்டார்கள் இந்த திட்டத்தில் 6 லட்சம் பேர் பயனடைந்தார்கள். அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்கு 25 ஆயிரம் மான்யம் கொடுத்தது நிறுத்தப்பட்டுள்ளது என திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!
தொகுதி மறுவரையைக் குறித்து இதுவரை மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதற்குள் ஸ்டாலின் அதனை தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைகிறது, எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை என பேசினார். மத்திய அரசு அறிவிக்காத ஒரு விஷயத்திற்கு எப்படி கருத்து சொல்லமுடியும். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது, தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என தெளிவுபடுத்திவிட்டார்.
திமுகவில் வாரிசு அரசியல் ஜோராக நடப்பதாக குற்றச்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியில் ஆரம்பித்த இப்போது இன்பநிதி வரை வந்துவிட்டதாக தெரிவித்தார். இது என்ன மன்னராட்சியா? குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர வேண்டுமா? குடும்ப ஆட்சிக்கு, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். ஏற்கனவே மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திமுக மீண்டும் மன்னராட்சியை கொண்டு முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறது திமுக.. விளாசிய எடப்பாடி பழனிசாமி..!