ஈரோடு கிழக்கு தொகுதியில் 500 பேர் போட்டியிட திட்டமிட்டு வேட்பு மனு விண்ணப்பம் பெற குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூகத்திற்கு, அரசியல் கட்சியினர் வேட்பாளர் பிரதிநிதித்துவம் தரவில்லை என கூறி, செங்குந்த முதலியார் மகாஜன சங்கத்தினர் 500 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, வேட்பு மனு விண்ணப்பங்களை பெற ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர். பெறப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் 500 வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், முதலியார் சமூகத்தினர் 80 ஆயிரம் பேர் இருப்பதாகவும், தங்கள் சமூகம் புறக்கணிக்கப்படுவால் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக 500 பேர் வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் அவர்கள் கூறினர். 500 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் இந்த தொகுதி வாக்கு பதிவு நடத்த இயலாது.
இதையும் படிங்க: பழைய துரோகங்களை மறைக்க திமுகவின் புது மாய வலை..! அதிமுக வளர்மதி விமர்சனம்..!!
புத்தக வடிவில் வேட்பாளர் பட்டியல் (பேலட் சீட்) தயாரித்து தனியாக தேர்தலை நடத்தும் நிலை உருவாகும். இதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய சங்கத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த தொகுதியில் 1033 பேர் தேர்தலில் போட்டியிட்டது இதுவரை அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: எத்தன உருட்டு..? தேர்வு நடத்த கூட "வக்கற்ற திமுக அரசு"... விளாசிய அதிமுக..!