புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் ஏப்ரல் நான்காம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் நான்காம் தேதி நான்கு இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு, வில்லியனூர் - கூடப்பாக்கம் சந்திப்பு என நான்கு இடங்களில் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

மேலும், கொக்கு பார்க் மார்க்கெட்டிங் கமிட்டி மைதானம், வெங்கடசுப்பா ரெட்டி சிலை சதுக்கம் பகுதிகளில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் நான்காம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!
புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தவெகவின் இந்தப் பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. விஜய் தலைமையிலான கட்சி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முன்னாள் பாஜக எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பிரச்சார அனுமதி விவகாரம், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!