2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விஜய் களமாடி வருகிறார். அவரது அரசியல் வருகை திருப்புமுனையாக அமையும் என பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர்.
கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: "16 பத்தாது 26 தான் சரியா இருக்கும்"... திடீரென ரூட்டை மாற்றிய விஜய்... தவெக நிர்வாகிகள் திண்டாட்டம்...!
ஈரோட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு எஸ்.பி அனுமதி அளித்துள்ளார். விஜயமங்கலத்தில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நடத்த உள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறும் இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு செய்த நிலையில் அனுமதி வழங்கி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை இடத்தை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING தொண்டையில் சிக்கிய வாழைப்பழம்... மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்...!