வேதாரண்யத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ,முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஒவ்வொரு இந்தியனும் பாரத பிரதமருக்கு நன்றி சொல்லனும், மத்திய அமைச்சர்களுக்கு நன்றி சொல்லணும், வயதான அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா இவர்களுடைய பணி அற்புதமான பணி இந்த அமைச்சர்கள் கண் விழித்து ராணுவ வீரர்களை உண்ணிப்பாக கண்காணித்துள்ளனர்.

ஆகவே இந்த பாரத பிரதமரை நினைத்து பெருமைப்பட வேண்டும் இதை விட்டுவிட்டு இன்னைக்கு ராணுவ வீரர்கள் என்ன எல்லையில் போய் சண்டையா போட்டாங்க. இன்னைக்கு இருக்கிற தொழில் நுட்பத்தை மேம்படுத்தி இந்த கருவிகளை வாங்கி கொடுத்தது மத்திய அரசு என பேசினார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றம் ஏற்படும்.. திமுகவினர் பேச்சை கேட்கும் போலீஸாருக்கு தண்டனை.. செல்லூர் ராஜூ எச்சரிக்கை!
செல்லூர் ராஜூவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “செய்தியாளர்கள் சந்திப்பில் நான் இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வெளியாகும் செய்திகள் தவறானது.

ராணுவ வீரர்கள் நாட்டுக்காக இரவு, பகல் பார்க்காமல் பாடுபட்டு வருகின்றனர். இவர்களது சேவையை எங்களது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். எங்கள் குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டுள்ளது. எனவே நான் ராணுவ வீரர்களை இன்று, நேற்று, நாளை என எப்போதும் மதிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் பேச்சானது முன்னாள் ராணுவ வீரர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என கூறி நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே முன்னாள் ராணுவ கேப்டன் தமிழரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ படை வீரர்கள் தங்களது எதிர்ப்பை செல்லூர் ராஜு தெரிவிக்கும் விதமாகவும், செல்லூர் ராஜு உடனடியாக ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கேட்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஈடுபட்டனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் பங்கு பெற்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்தி விட்டோம்..! பாக்., வெற்றி... ரோட் ஷோ காட்டிய கோமாளி ஷாஹித் அஃப்ரிடி..!