திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் இதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கோவி செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற உடன் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்றுவிட்டது. அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவோம். தற்போது அமைந்துள்ள மத்திய அரசு லாட்டரி விற்பனையை கொண்டு வருவதற்கு துடித்து கொண்டிருக்கிறது.
தவெகவினர் அரசியல் பேச வேண்டும் திமுக ஆட்சியில் மகளிர் குழுவைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதுபோல் தாங்கள் அறிவித்த 2500 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை செய்வது விட்டு விட்டு திமுக பற்றி குறை பேசுவது நல்லதல். வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தலிலும் தவெக வெற்றி பெற முடியாத அந்தளவிற்கு திமுகவினரின் பணிகள் இருக்கும்.
இதையும் படிங்க: "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென தங்கள் மாவட்ட சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் போட்டியிட்டால் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வைப்போம். இந்த ஆட்சி நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் தான் நடைபெறும் எனவும் தெரிவித்தார். திமுகவை எப்படியும் வீழ்த்தி விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் திமுகவை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது என தெரிவித்தார்.
வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் ராகுல் காந்தி முகத்தில் கரியை பூசுவார்களோ தவிர இனி ஒரு காலமும் வெற்றி பெற முடியாது என்றும், உங்களை போல் துரோகி நாட்டில் உண்டா எனவும் ஆவேசமாக பேசினார். தூத்துக்குடிக்கு வந்தால் அமைச்சர் ஆதவ அர்ஜுனாவின் சட்டையை கிழிக்கும் நிலையை எங்கள் தொண்டர்கள் உருவாக்குவார்கள் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: தவெக பெண் நிர்வாகிகளுக்கு இழிவு! அரசியல் விமர்சகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது மீது வழக்குப்பதிவு!