இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை வெற்று நிதிநிலை அறிக்கை என விவசாயிகள் சங்கம் கண்டனம்.
வறண்ட நிதிநிலை அறிக்கை கண்டனத்திற்கு உரியது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த எந்த அறிவிப்பும் இல்லை என காவேரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து.
தங்களது விருப்பம் எதுவும் நிறைவேறாததால் விரைவில் வேளாண் நிதி நிலை அறிக்கையை கண்டித்து போராட்டங்கள் நடைபெறும் என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் அறிவிப்பு.
தமிழக விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்த வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இல்லை என்றும், இது ஒரு வெற்று நிதிநிலை அறிக்கை, வறண்ட நிதிநிலை அறிக்கை என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் தெரிவித்தார் .
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் இல்லை! இனிக்க இனிக்க பேசி ஏமாற்றி விட்டார்கள்! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை. நெல் குவின்டால் 3500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை .
கரும்புக்கு டன் 4500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. கரும்புக்கான விலை பற்றியும் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை .
பால் கொள்முதல் விலை பற்றியும் இந்த நிலை அறிக்கையில் இல்லை. வேளாண் சாகுபடியை பெருக்க மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது பற்றியும் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை . மொத்தத்தில் இது வறண்ட நிதிநிலை அறிக்கை. வெற்று நிதிநிலை அறிக்கை.
தங்களது எதிர்பார்ப்புகளை வேளாண் மானிய கோரிக்கையில் எதிர்பார்க்கிறோம் .
அதிலும் இல்லை என்றால் போராட்டங்கள் தொடரும் என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் தெரிவித்தார் .
இதையும் படிங்க: 2026 வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையை வாசித்தார் அமைச்சர் வினோத்! சட்டசபை ஒத்திவைப்பு!