விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோடி காவல் கிராமத்தில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .
உடனடியாக விவசாயிகள் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யாவிடில் சென்னை கோட்டையை முற்றுகையிடப்படும் என விவசாயிகள் அறிவிப்பு .
தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகளின் அனைத்து வேளாண் கட்டணம் கிடைக்கும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் கடன் தள்ளுபடி 50 சதவீதம் அளவிற்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது இந்நிலையில்
இன்று அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோடிக்காவல், கீழ சூரிய மூளை, கூத்தனூர், மகாராஜபுரம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோடிக்காவல் கடை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!
உடனடியாக வேளாண் கடன்களை அரசு தள்ளுபடி செய்யாவிடில் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட்! ஓசூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!