இராமேசுவரத்திலிருந்து கடந்த வாரம் கடலுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணன், ஜோசப் நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகிபோருக்குச் சொந்தமான விசைப்படகுகளையும் படகிலிருந்த 10 மீவைர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளதாகவும், மேலும் நெடுத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயன் சிவராமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் கைப்பற்றி படகிலிருந்த 17 மீனவர்களையும் மல்லை தாண்டிய குற்றஞ்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது கைது செய்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 படகுகளை கைப்பறி 100 மீர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை மிகவும் அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200 தமிழக மீனவர்களின் படகுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இதில் 150 படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடமையாககி உள்ளன எனவும் நாட்டுடமையாக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இருப்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!
எனவே, தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு... பிரதமர் வேடிக்கை பார்ப்பது சரியா? ராகுல்காந்தி காட்டம்...!