அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையிலான பிரச்சனை நீண்டு வருகிறது. இரண்டாகப் பிரிந்த பாமக திக்கு முக்காடி வருகிறது. அப்பாவா மகனா என்ற போட்டி வலுத்து வருகிறது. இதற்கிடையில் ராமதாஸ் மீது அன்புமணியும் அன்புமணி மீது இராமதாசும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஜி.கே. மணி துரோகி என்று அன்புமணி கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் ஜிகே மணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
ராமதாசும் அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் என்றால் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார் தானும் தனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் வாருங்கள் என்று சொன்னால் வருவேன் இல்லையென்றால் அப்படியே போய்விடுகிறேன் என்றும் கூறினார். கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றும் எதிர்காலம் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கட்சி இரண்டாக பிரிந்தால் என்ன எதிர்காலம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய ஜி.கே. மணி நெருக்கடியான சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தல் வருகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி பேசுவார் எனவும் தங்கள் கட்சியை பொறுத்த வரை நிறுவனருக்கு தான் முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அந்தக் கிழவனை மிதிச்சு..! ராமதாசை கொல்ல சொல்பவருக்கு அன்புமணி பாராட்டு… ஜி.கே. மணி பகிரங்க குற்றச்சாட்டு…!
செயற்குழு பொதுக்குழு என அனைத்து முடிவுகளைக் கடக்கும் முழு அதிகாரம் நிறுவனருக்கு மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். பாமகவினரிடம் அன்புமணி விருப்பு மனுக்கள் வாங்குவது ஏமாற்று வேலை என்றும் யாரும் ஏமாறக்கூடாது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அது மட்டும் நடந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” - அன்புமணிக்கு சவால் விட்ட ஜி.கே. மணி...!