தென்காசி அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்துன் பின் சக்கரங்கள் துண்டிக்கப்பட்டு சாலையில் ஓடியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த நான்கு பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து இன்று காலை புறப்பட்ட அரசு பேருந்து குற்றாலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடையநல்லூருக்கும் தென்காசிக்கும் இடையே இடைகால் என்ற பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின் பகுதி சக்கரங்கள் திடீரென மொத்தமாக பேருந்தில் இருந்து துண்டிக்கப்பட்டு சாலையில் ஓடியது.

இதை சட்டென உணர்ந்த பேருந்தை ஒட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பணிமனையை சேர்ந்த சங்கரன் (52 ) பெருந்தை சாமர்த்தியமாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 87 பயணிகளில் நான்கு பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலை ! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு
நல்ல வேலையாக அப்போது அந்த பகுதியில் வேறு வாகனங்களோ இருசக்கர வாகனங்களில் செய்பவர்களோ இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 
பொதுவாக தமிழகத்தில் அரசு பஸ்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில் பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று சிக்கலுக்கு உள்ளான இந்த பேருந்து புதுப்பிக்கப்பட்டபழைய பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: "இஃப் யூ பேட் ஐ அம் யுவர் டாட்" . அமெரிக்காவிற்கு பேரழிவுக்கான எச்சரிக்கை கொடுத்த ரஷ்யா...!