தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், சில வாசகங்கள் வெறும் சொற்களாக மட்டுமல்லாமல், ஒரு முழு இயக்கத்தின் உணர்வைத் தாங்கியிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான போராட்ட வாசகம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இந்த வாசகம், 1960களின் தீவிர அரசியல் போராட்டங்களின் சின்னமாகத் தோன்றியது, தமிழர்களின் சுயமரியாதை, மொழி உரிமை மற்றும் சமூக நீதிக்கான தாக்குதலைப் பிரதிபலிக்கிறது.
இது வெறும் ஒரு அழைப்பு வாசகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்திய, மக்களை ஒருங்கிணைத்த, வெற்றியின் உறுதியைத் தரும் ஒரு மந்திரமாகப் பரிணமித்தது. தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை பயன்படுத்துகிறார்.

திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது, மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள், யாருடன் போராடும் என்று ஆளுநர் கேள்வி எழுப்பி இருந்தார். தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை, இங்கு எந்த சண்டையும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!
தமிழ்நாடு எதற்காக போராடும் என்ற ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். சென்னை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, ஆளுநர் ரவி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். தமிழக ஆளுநர் ரவி நமக்கு நண்பர்தான் என்றும் கூறினார். மாநில உரிமை, சமூக நீதிக்காக தமிழ்நாடு போராடும் என்றும் மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு என்றும் போராடும் எனவும் பதில் கொடுத்துள்ளார்.
மதம், சாதி வெறி, ஹிந்தி திணிப்பு எதிர்த்து என்று தமிழ்நாடு போராடும் யாரை எதிர்த்து போராடுகிறார்கள் என ஆளுநர் கேட்ட கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். கொள்கையற்ற இளைஞர்கள் இப்போது உருவாகி வருகின்றனர் என்றும் அதனால் பெரியார் சிந்தனை தற்போது தான் அதிகம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: என்ன சொல்லித் தேற்றுவது… உடைந்துப் போன உதயநிதி… கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி…!