திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 40 போலீசார் அடங்கிய குடுவையின் அமைப்பு குற்றவாளியை தேடி வந்தனர்.
இதையும் படிங்க: வெளிய போ கூடாது.. எதையும் சொல்ல கூடாது..! பெண் போலீஸ் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்..!
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை அடையாளம் காட்டினால் 5,00,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் குற்றம் நிகழ்த்திய போது அவர் அணிந்திருந்த அதே நீல நிற சட்டை அணிந்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வகர்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை திருவள்ளூர் போக்சோ நீீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது விஸ்வகர்மா கதறி கதறி அழுதுள்ளார். இதனிடையே, பாலியல் வழக்கில் கைதாகி உள்ள விஸ்வகர்மாவிற்கு நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை ஆணையர் கைது! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை...