கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ளது எலச்சிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை புத்தகப்பையில் வைத்து வகுப்பறைகளுக்குள் கொண்டு வந்தது தெரியவந்தது. அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஆறாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களின் புத்தகப் பையை சோதனை இட்ட பொழுது இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்கள் வைத்திருந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பள்ளி நிர்வாகம் இது குறித்து தகவல் சொன்னது.
இது தொடர்பாக தகவல் வெளியில் கசிந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளி சிறுவர்களிடம் குட்கா குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது எலச்சிபாளையத்தில் உள்ள லோகு மளிகை என்ற கடையில் இருந்து இந்த குட்கா பொருள்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த கடையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அவர் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கருமத்தம்பட்டி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.அதன் பேரில் அங்கு சென்ற பொலீசார் அந்த கட்டிடத்தின் உள்ளே பதுக்கி வைத்து இருந்த குட்கா பொருள்களை பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் அவற்றை எடை போட்டு பார்த்தனர்.
அதில் 141 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விநியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுச்சி பாளையம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி.. மத்திய நிதி அமைச்சகம் தகவல்..!
இது குறித்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் பள்ளி மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. இவை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து அவற்றை முற்றிலும் தடுக்க வேண்டும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர்களை சந்தேகத்தின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் சோதனை செய்த போது அவர்கள் மிட்டாய் என நினைத்து இந்த போதை வஸ்துகளை வைத்திருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. என்ன சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே குழந்தை பருவத்தில் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமையை தவிர்க்க... குஜராத் டிராஃபிக் போலீஸ் ஒட்டிய போஸ்டர்.. கிளம்பிய சர்ச்சை..!!