தமிழ்நாட்டின் முக்கிய பூ வியாபார மையமான கோவை பூ மார்க்கெட்டில், ஒரு பூ வியாபாரி ஆடைகள் குறித்து வெளிப்படையான கருத்து தெரிவித்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பவம், பெண்களின் உடைகள் குறித்த சமூக அக்கறை மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. இது, ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவாக மாறி, பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களையும் ஆதரவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூ மார்க்கெட்டில் பூ வாங்க, கடந்த ஞாயிற்றுகிழமை ஜனனி என்ற பெண் ஸ்லீவ்-லெஸ் உடை அணிந்துகொண்டு தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் வியாபாரி ஒருவர், இங்கு அரைகுறையாக உடை அணிந்து வரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இது அரைகுறையான ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை என்பது அவர்களின் உரிமை என பதிலுக்கு தனது பக்கம் உள்ள நியாயத்தை பேசினார்.
இதையும் படிங்க: சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்
அவரிடம் முதலில் விவாதம் செய்த வியாபாரிக்கு ஆதரவாக மேலும் சிலர் அங்கு வந்து, கோவை பூ மார்க்கெட்டில் அரைகுறையாக உடை உடுத்தி வந்தவர்களால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என கூற, அதற்கு அந்த பெண், தான் அணிந்துள்ளது அப்படிப்பட்ட உடையா? என கேள்வி எழுப்பினார். மேலும் இருதரப்பினரும் மாறி மாறி விவாதம் செய்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
https://x.com/i/status/1970807371745440229
பாதிக்கப்பட்ட ஜனனி கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், ஆந்திராவில் உள்ள சட்ட கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த நான், ஆந்திராவில் உள்ள NVP கல்லூரியில் சட்டம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். என்னுடைய அம்மா கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கோவை மலர் அங்காடியில் திசைகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஓவிய பயிற்சியில் கலந்துகொள்ள சென்றேன்.
மேற்படி பயிற்சியை முடித்துவிட்டு சுமார் மதியம் 1 மணியளவில் அங்கிருந்து கிளம்பும்போது, மலர் அங்காடியில் விற்பனையாளர்கள் என் உடையைப் பார்த்து ஆபாசமாக கிண்டல் செய்து கொண்டு 'என்ன டிரஸ் இது? இப்படி அரைகுறையுமா வரக்கூடாது" என கூறினர். மேலும், தான் அணிந்திருந்த கையில்லாத மேற்சட்டையை ஆபாச நோக்கத்தோடு பார்த்து அனைவரது முன்பாக இழிவாக பேசினார். நான் அப்படி என்ன ஆபாசமாக உடை அணிந்துள்ளேன் என்று அவர்களிடம் கேட்டபோது இப்படி வந்தால் ஏதாவது செய்துவிடுவோம். மேலும், யாரவது ஏதாவது செய்துவிட்டால் எதையும் கேட்க கூடாது என்று கூறி மிக மோசமாக நடந்து கொண்டார்.

அவருக்கு ஆதரவாக பேசவந்த நபர்களும் என்னிடம் மோசமாக பேசி பொது இடத்தில் அவமானப்படுத்தினர். மேலும் கையிலிருந்த எனது செல்போனை பறிக்கும் நோக்கத்தோடு கையை பிடித்து இழுத்தார்கள் தடுக்க சென்ற என்னிடமும் மிக மோசமாக நடந்து கொண்டார்கள். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: வீல் சேர் கொடுக்கல.. கோவை அரசு மருத்துவமனையில் 2 மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்..!