கரூர் சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு அதிக பாதுகாப்பு செய்யப்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே விஜயை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூட்ட நெரிசல் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரித்ததாகவும் தெரிவித்தார். காவல்துறையின் எச்சரிக்கையும் மீறி பிரச்சார வாகனம் முன்னோக்கி சென்றதாக கூறினார்.
3 மணி முதல் 10 மணி வரை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டதாகவும் ஆனால் 12 மணிக்கு விஜய் வருவார் என பொதுச்செயலாளர் சமூக வலைதளங்கள் வாயிலாக கூறியதாகவும் அதனால் காலை முதலே கரூரில் கூட்டம் நெரிசல் அதிக அளவில் இருந்ததாகவும் கூறினார். ஆனால் விஜய் 7 மணி நேரம் தாமதமாக தான் வந்தார். என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் விளக்கம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் என்றும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு கையாலாகாத திமுக அரசு தான் காரணம் என்று தெரிவித்தார். ஆனால் சட்டமன்றத்தில் விஜய் தாமதமாக வந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக குறிப்பிட்டார். விஜய் அனுமதி கேட்ட நேரம் 3 மணி முதல் 10 மணி வரை என்றும் விஜய் வந்தது இரவு 7:00 மணிக்கு எனவும் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு அருகதை இல்ல! அவர் ஆட்சியில கால் கூட தரையில படல... பந்தாடிய அமைச்சர் சேகர்பாபு...!
அப்படி என்றால் விஜய் கொடுத்த நேரத்தில் தானே வந்திருக்கிறார் என்றும் ஏழு மணி நேரம் தாமதம் என தேவையில்லாமல் பழி சுமத்துவதாகவும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் பொய் பேசலாமா எனவும் கேள்வி எழுப்பினார். அதனால்தான் எது கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக உருட்டுக்கடை அல்வா என விமர்சித்தார் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பொய் பேசாதீங்க EPS... அதிமுக ஆட்சியில் 600 மூட்டைகள் தான் கொள்முதல் பண்ணாங்க... MRK பன்னீர் செல்வம் பாய்ச்சல்...!