சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொண்டை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டது.
முதலில் ஒரு மாணவி அளித்த புகாரின் ஜாமினில் வெளிவந்த அவர் மீது பலமானதுகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தீவிரமடைந்தது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பயிற்சி பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 2021 ஆம் ஆண்டில் அளித்த புகாரின் பேரில் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜ் ஜாமினில் வெளிவந்தார். இதை அடுத்து மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருந்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா, இந்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 79வது சுதந்திர தினம்.. சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!!
இதையும் படிங்க: செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்