திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் இரண்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவிலிருந்து வந்த இளம்பெண் தனது சகோதரியுடன் திருவண்ணாமலை புறநகர் பகுதியில் உள்ள ஏந்தல் புறவழிச்சாலை அருகே ஒரு பள்ளியில் தங்கியிருந்தார். இரவு நேரத்தில், அவர்கள் இருவரும் வெளியே வந்து காத்திருந்தனர். அப்போதுதான், ரோந்துப் பணியில் இருந்த சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய காவலர்கள், சீருடையில் இருந்தபோதிலும், அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் நெருங்கியதாக தெரிகிறது.

இரு பெண்களிடமும் கேள்விகள் கேட்டு, அவர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்தனர். ஆனால், அது வெறும் போலி விசாரணையாக இருந்தது. காவலர்கள், இளம்பெண்ணை தனியாகப் பிரித்தெடுத்து, அவரது சகோதரியை பள்ளியில் தள்ளிவிட்டு, அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மானக்கேடு... போலீஸ்காரர்களே பெண்ணை சீரழித்த கொடூரம்... சீமான் ஆவேசம்..!
இந்தச் சம்பவம், ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில், ஆள்நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை அருகே நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எஸ்பி பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை ஆட்சியர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பச்சை பொய் சொன்ன பாக்.,!! சைலண்டா சம்பவம் செய்த ஜனாதிபதி! உலகுக்கே சொல்லாமல் சொன்ன செய்தி!