சென்னையில் இன்று காலை தொடங்கிய கனமழை தொடர்ந்து நீடிப்பதால், மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்துக் காவல்துறை மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, சென்னையில் மழை நாளை காலை 8 மணி வரை நீடிக்கக்கூடும். தொடர்ந்து பெய்துவரும் இந்த மழையால், மாலையில் அலுவலகம் முடிந்து ஒரே நேரத்தில் அனைவரும் சாலைகளில் புறப்படும்போது, நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இயல்பை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகனங்களின் வேகம் குறைந்து, நெரிசல் நீண்ட நேரம் நீடிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி - குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பயணங்களைத் திட்டமிடும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தேவையின்றிப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையை கவரும் Wonderla..!! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உலகத் தர பொழுதுபோக்கு பூங்கா!