ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை எதிரொளியாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது உடுமலை அடுத்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 36 மணி நேரத்தில் சம்பவம் உறுதி...!

மேலும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அணை பகுதியில் உள்ள பிள்ளையார் அருவியலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் காவல்துறை தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: காலையிலயே பேரிடி.. மழையால் அரங்கேறிய சோகம்.. துடிதுடித்து பலியான 3 பேர்..!