• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தல் விவகாரத்தால் அனல் பறந்த சட்டமன்றம்.. செங்கோட்டையன் vs இபிஎஸ்.. நடந்தது என்ன?

    சட்டசபை நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கேற்றுவிட்டு ராஜினாமா செய்து, மேல்மாடியில் உள்ள கட்சியில் சேர்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
    Author By Shanthi M. Tue, 25 Aug 2026 12:02:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    horse-trading-debate-between-minister-sengottaiyan-and-eps

    தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில் துறை மற்றும் கனிம வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தபோது, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான பேச்சுவார்த்தை காரசார விவாதமாக உருவெடுத்தது. பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடந்த இந்த மோதல், இறுதியில் சட்டசபையில் அமளியை ஏற்படுத்தியது.

    விவாதத்தின் போது செங்கோட்டையன் பேசுகையில், “ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். அந்தத் தொகுதிகளின் குறைகளை அமைச்சர்கள் தலா ஒரு நாள் ஒதுக்கிக் கேட்டறிந்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இதற்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு நாளில் ஒரு தொகுதியின் கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டுத் தீர்த்துவிட முடியாது. அதனால்தான் எம்.எல்.ஏ. அவசியம். பொறுப்பு அமைச்சர் ஒரு நாள் மட்டும் செல்வார்” என்று வாதிட்டார்.

    செங்கோட்டையன் பதிலளிக்கையில், “விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, “விவாதம் வேறு திசையில் செல்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வெற்றி பெற்ற பிறகு அந்த எம்.எல்.ஏ. எங்களைச் சந்தித்து மனு கொடுக்கிறார். சட்டசபை நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கேற்றுவிட்டு ராஜினாமா செய்து, மேல்மாடியில் உள்ள கட்சியில் சேர்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: ஓராண்டில் மாற்றம்.. அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்..!! ஆதவ் அர்ஜூனா உறுதி!!

    Edappadi palanisamy

    சபாநாயகர் தலையிட்டு, “உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகக் கருத்தைத் தெரிவியுங்கள். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுதொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் உள்ளன” என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து செங்கோட்டையன், “குதிரைப் பேரம் என்றெல்லாம் பேசினார்கள். நீங்கள் நாட்டுக்காக பெரிய கஷ்டப்பட்டது தெரியாதா?” என்று கிண்டல் செய்தார். மேலும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் மனுவை வாபஸ் பெற்றதைச் சுட்டிக்காட்டி, “அது குதிரைப் பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

    எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், “அவரின் மனு தேர்தல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு இடையில் மட்டுமே பிரச்சினை இருந்தது. அதை இங்கே இணைக்கக் கூடாது. இருக்கும் கருத்தைப் பேச வேண்டும். எங்களோடு இருந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து உடனடியாக வேறு கட்சியில் இணைகிறார்கள்” என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

    மைக் அணைக்கப்பட்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்து, “உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாதா? என்னங்க?” என்று சத்தமிட்டார். இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த சம்பவம், சமீபத்திய ராஜினாமாக்கள் மற்றும் கட்சி மாற்றங்கள் தொடர்பான அரசியல் பதற்றத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
     
    இதையும் படிங்க: என்னது.. மாமா, மச்சானா..!! சட்டமன்றத்தில் இதெல்லாம் பேசக்கூடாது.. கடிந்துகொண்ட துரைமுருகன்!!

    மேலும் படிங்க
     2029-ல் "ஒரே நாடு ஒரே தேர்தல்"? 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வருமா தவெக ஆட்சி?

    2029-ல் "ஒரே நாடு ஒரே தேர்தல்"? 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வருமா தவெக ஆட்சி?

    இந்தியா
    ‘கலீபா’ கொடுத்த பெரிய அடையாளம்..!! அதுக்காக மலையாள சினிமாவை விடமாட்டேன்.. அதுதான் என் வீடு.. நடிகை கைரா வாசுதேவன்..!

    ‘கலீபா’ கொடுத்த பெரிய அடையாளம்..!! அதுக்காக மலையாள சினிமாவை விடமாட்டேன்.. அதுதான் என் வீடு.. நடிகை கைரா வாசுதேவன்..!

    சினிமா
    இந்தியாவில் நாளை மிலாது நபி அனுசரிப்பு.. நபிகளாரின் புகழைப் போற்றும் சிறப்புத் தொகுப்பு!!

    இந்தியாவில் நாளை மிலாது நபி அனுசரிப்பு.. நபிகளாரின் புகழைப் போற்றும் சிறப்புத் தொகுப்பு!!

    இந்தியா
    அதிமுகவின் ஆணி வேரில் ஆசிட் ஊற்றுவதை... அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரடி எச்சரிக்கை...!

    அதிமுகவின் ஆணி வேரில் ஆசிட் ஊற்றுவதை... அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரடி எச்சரிக்கை...!

    அரசியல்
    சட்டப்பேரவையில் இபிஎஸ் ஆவேசம்.. பொறுமையா பேசுங்க.. சபாநாயகர் அறிவுறுத்தல்.!

    சட்டப்பேரவையில் இபிஎஸ் ஆவேசம்.. பொறுமையா பேசுங்க.. சபாநாயகர் அறிவுறுத்தல்.!

    தமிழ்நாடு
    H-1B விசாவுக்கு ரூ.90 லட்சம் வரை கூடுதல் கட்டணம்? அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி!!

    H-1B விசாவுக்கு ரூ.90 லட்சம் வரை கூடுதல் கட்டணம்? அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி!!

    உலகம்

    செய்திகள்

     2029-ல்

    7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்? பிரதமர் மோடியுடன் சந்திப்பு? புதிய திருப்பம்!

    7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீனா அதிபர் ஜி ஜின்பிங்? பிரதமர் மோடியுடன் சந்திப்பு? புதிய திருப்பம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share