திருப்பரங்குன்றம் மலை மீது, முருகன் கோயிலின் தலவிருட்சமாக விளங்கும் கல்லத்தி மரம் ஒரு சாதாரண மரம் அல்ல. இத்தலத்தின் ஆன்மீக இதயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த மரம் பாறை இடுக்குகளில் வளரும் தன்மை கொண்டது, கல்லால மர இனத்தைச் சேர்ந்தது., காட்டத்தி அல்லது கல்லத்தி என்று தமிழில் அழைக்கப்படுகிறது.
சிறிய ஆலமர இலை போன்ற கரும்பச்சை இலைகள், இலைக்கோணங்களில் மெல்லிய காய்கள் கொண்ட வெண்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த மரம், பால், பட்டை, பழம் ஆகியவற்றால் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலின் வரலாற்றோடு இணைந்திருப்பதால் இம்மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு.

ஆறுபடை வீடுகளில் முதலாவதாக விளங்கும் இத்தலத்தில், முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட இடமாகக் கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. சமீபகாலமாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துர்கா மற்றும் கோவில் இரண்டுமே மலை மீது இருப்பதால் கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எச். ராஜா கல்லத்தி மரம் தர்காவுக்கு சொந்தமானதா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி மலைப்பாதையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்தார். போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: "ஜனநாயகன் படத்த ஏன் இழுத்தடிக்கிறீங்க?" விஜய் பட விவகாரத்தில் சென்சார் போர்டை சாடிய சீமான்!