சிதம்பரம் அருகே இரவில் சுடுகாட்டில் எரிந்த பெண் பிணம். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை. 30 வயது பெண்ணை கணவரே அடித்துக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் உடலை எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம். தீவிர விசாரணை
சிதம்பரம் அருகே உள்ளது மீதிகுடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று இரவு நேரத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. இதை அறிந்த அந்தப் பகுதி கிராம உதவியாளர் மர்மமான முறையில் பிணம் எரிவது குறித்து வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிதம்பரம் ஏ.எஸ்.பி. சத்திரியகவின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை நாளில் அவலம்... துடிக்க துடிக்க ராஜேஸ்வரியை அடித்தே கொன்ற கணவன்... கொலையை மறைக்க செய்த காரியம் தான் ட்விஸ்ட்டே...!
இதில், சுடுகாட்டில் எரிந்த சடலம் அதே கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் ரவிச்சந்திரன்(34) என்பவரது மனைவியான சிவகாமி (30) என்பது தெரிய வந்தது. சிவகாமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஒரு வாகனம் மூலம் சிவகாமியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்ததும், பின்னர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் தலைமறைவாகி விட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
ரவிச்சந்திரனும் சிவகாமியும் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கிடையே சமீபத்தில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறில் கணவன் ரவிச்சந்திரன் அடித்ததில் மனைவி சிவகாமி இறந்திருக்கலாம் என்றும், பின்னர் தடயங்களை அழித்து விட்டு மனைவியின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துக் சென்று எரித்து இருக்கலாம் எனவும் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் அறிஞர்களைக் கொண்டு சுடுகாட்டில் எரிந்த சடலத்தை எலும்புகளை எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் மாயமான சிவகாமியின் கணவர் ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
இதையும் படிங்க: விஜய் ஆட்சிக்கு எதிர்ப்பு..! "எகிறும் விலைவாசி... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு".! திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்..!