வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

“பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை”..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் இசை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அந்த மாமனிதர், இன்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தனது இசையின் மூலம் உயிரோடு இருக்கிறார். ஜூன் 2, 2026 அன்று, அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் முழு தமிழகமும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் என்று கூறினார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.  

இதையும் படிங்க: "ரவுடிகள் அட்டகாசம்"… உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நன்றி கோரி ஆடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் இசை பல தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாகவும் ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்க்கை இறந்த நிலையில் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படிங்க: அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்… இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी