இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் இசை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அந்த மாமனிதர், இன்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தனது இசையின் மூலம் உயிரோடு இருக்கிறார். ஜூன் 2, 2026 அன்று, அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் முழு தமிழகமும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இளையராஜா 1943 ஜூன் 3 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பன்னைப்புரம் எனும் சிற்றூரில் பிறந்தார். அவரது உண்மையான பிறந்த தேதி ஜூன் 3 என்றாலும், அவர் ஜூன் 2 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்குக் காரணம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த தேதியான ஜூன் 3-ஐ மதித்து, அந்த நாளை அவருக்கு முழுமையாக ஒதுக்க வேண்டும் என்பதுதான்.

கலைஞர் அவருக்கு “இசைஞானி” என்ற பட்டத்தை வழங்கியதும் இந்த மரியாதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்த சிறிய ஆனால் ஆழமான முடிவு, இளையராஜாவின் பணிவையும், தமிழ் கலாச்சாரத்தின் மீதான அவரது பற்றையும் பிரதிபலிக்கிறது. இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “நல்லா வருது.. வேணான்னு பாக்குறேன்”..! நாங்க கோட் சூட் போட கூடாதா..? திருச்சியை அலறவிட்ட முதல்வர் விஜய்..!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் என்று கூறினார். உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!