தமிழ்நாட்டில், காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் சட்டவிரோத மணல் அள்ளுவது மற்றும் குவாரி நடவடிக்கை அதிகரித்துள்ளன. இந்தச் சட்டவிரோத நடவடிக்கையால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு, விவசாய நிலங்களுக்கு பாசன நீர் பற்றாக்குறை, கடல் நீர் ஊடுருவல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே, தமிழக அரசு, பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனையை நேரடியாக கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆன்லைன் மூலம் மணல் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மணல் கொள்ளையைத் தடுக்க காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாமூல் பெறுவதாகவும், இதனால் நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

அதிகப்படியான மணல் எடுத்தல் ஆறுகள், கடற்கரைகள் மற்றும் நிலப்பரப்பில் அரிப்பை ஏற்படுத்துகிறது. அகழ்வின் போது கனிமங்கள் மற்றும் மாசுபடுத்திகள் நீர்நிலைகளில் கலந்து மாசடைகின்றன. மேலும், ஆறு மற்றும் கடல் சூழலில் வாழும் உயிரினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. இது நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்து, நீர்ப்பற்றாக்குறையை உருவாக்குகிறது. கடலோரப் பகுதிகளில் மணல் அகழ்வு கடற்கரையை சுருக்கி, கடல் நீர் உட்புகுதலை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், அரசின் சுரங்க விதிகளை மீறுவதோடு, குற்றச் செயல்களையும் ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, குவாரி உரிமையாளர்களோடு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ஊழல் செய்வது மிக தீவிர குற்றமாக கருதப்படும் என எச்சரித்தனர். கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து என்றும் அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளில் கடமை எனவும் தெரிவித்தார். மேலும், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதையும் படிங்க: பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!