பிடிவாரண்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நள்ளிரவில் கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்றபோது தப்பியதாக திருநீலக்குடி போலீசார் புகார். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பெட்ரோல் பங்கில் போலீஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு போலீசார் தூங்கிய போது சம்பவம்
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 26). இவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் நிபந்தனையுடன் ஜாமீன் பெற்று வெளி வந்துள்ளார்.
பின்னர் அவர் அந்த நிபந்தகளை பின்பற்றாமலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நரேந்திரனிற்கு பிடியாணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து தருமபுரிக்கு விரைந்த தஞ்சாவூர் மாவட்ட திருநீலக்குடி போலீசார், தருமபுரியில் சகோதரியின் வீட்டில் பதுங்கி இருந்த நரேஷை நேற்று நள்ளிரவில் கைது செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தகும்பகோணத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா?... மதுரை உளவுத்துறை காவலர் மீது கொலைவெறி தாக்குதல்...!
இன்று அதிகாலை 2.30 மணியளவில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர் கேட் அருகே சென்றபோது, டிரைவருக்கு தூக்கம் வந்ததன் காரணமாக அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாகனத்தை நிறுத்திவிட்டு திருநீலக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்பட 5 போலீசார் தூங்கியதாக தெரிகிறது.
அதை சாதகமாக்கிக் கொண்ட வாலிபர் நரேஷ், கை விலங்குகளுடன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய கூறப்படுகிறது. பின்னர் குற்றவாளி நரேஷ் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திருநீலக்குடி போலீசார் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து ராசிபுரம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் மற்றும் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதோடு, ஏரிப் பகுதியில் நரேஷ் பதுங்கி உள்ளாரா? எனவும் தீவிரத் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!