சேலத்தில் இன்று நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக்கேட்பு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, நாட்டின் தற்போதைய நாடாளுமன்றச் சூழல் குறித்துத் தனதுக் கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார். நாடாளுமன்ற வளாகத்திலேயேப் பிரதமருக்குப் பாதுகாப்பில்லை என்றுச் சொல்லப்படும் சூழல் ஒரு மோசமானக் காலகட்டத்தைக் காட்டுகிறது என அவர் விமர்சித்தார்.
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களதுக் கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கனிமொழி எம்.பி., "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அறிக்கை அமையப்போகிறது" எனத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ரா. ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டியது கடமை. ஆனால், முறையான விவாதம் ஏதுமின்றி, எதிர்க்கட்சிகள் பேசாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது ஜனநாயக அவலம். ஆளும் கட்சி உறுப்பினர்களேப் பிரச்சனைகளை உருவாக்குவதும், அதனைத் தடுக்க அமைச்சர்கள் முயலாமல் இருப்பதும் வேதனையானது.
இதையும் படிங்க: சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு ரெட் சிக்னல் காட்டிய போலீஸ்..!! வெளியான அதிரடி காரணம்..!!
குறிப்பாக, எதிர்க்கட்சியில் இருக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்குதல் நடத்தப்படும் என்றக் காரணத்தைச் சொல்லி, நாட்டின் பிரதமர் அவைக்கு வராமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்ன மாதிரியான விளக்கம் என்று தெரியவில்லை. நாட்டின் பிரதமருக்கே நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்றுச் சொல்லக்கூடிய ஒரு மிக மோசமானக் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் அரசு என்னப் பதில் சொல்லப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சேலத்தில் நடந்த ரகசிய மீட்டிங்! இபிஎஸ்-ஐ சந்தித்த பாமக டீம் - திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஸ்கெட்ச்..!