1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்று, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 30 இடங்களை வென்று பெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். எனினும், 1999 ஆம் ஆண்டில், ஜெயலலிதா பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றார்.
பாஜகவின் தேசிய அளவிலான கொள்கைகள் மற்றும் அதிமுகவின் பிராந்திய நலன்கள் முரண்பட்டன. குறிப்பாக, பாஜகவின் மதவாதக் கொள்கைகள் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. இது கூட்டணியில் பதற்றத்தை உருவாக்கியது.
இதையும் படிங்க: ஜெ. முடிவை விமர்சித்த கடம்பூர் ராஜுவை கட்சியிலிருந்து நீக்குங்க... முன்னாள் எம்.பி ஆவேசம்..!
ஜெயலலிதாவின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், 1999 ஏப்ரலில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் (269-270) தோல்வியடைந்து கவிழ்ந்தது.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 1999 தேர்தலை எதிர்கொண்டது. இதற்கு மாறாக, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது வரலாற்றுப் பிழை என்று ஜெயலலிதாவின் முடிவை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்திருந்தார்.
பாஜகவை புகழ்வதாக நினைத்து ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்ததால் கடும் சர்ச்சை நிலவியது. ஜெயலலிதாவின் முடிவையே விமர்சிக்கும் அளவிற்கு கடம்பூர் ராஜு வளர்ந்து விட்டாரா என்றும் வளர்த்தக் கிடா மார்பில் பாய்ந்ததாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை என கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் தந்தார்.
கடந்த 1999 இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது திமுக ஆட்சி அமைத்ததை தான் கூறினேன் என்றும் தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டதாக கடம்பூர் ராஜு விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: நான் தான் ஜெயலலிதாவோட பொண்ணு.. கிளம்பிய புது சர்ச்சை.. யார் அந்த மகள்..?