இந்தியாவின் 14வது துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். அவருடைய பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்த ராஜினாமா மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடுவில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் இதை உடல்நலப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டாலும், மருத்துவ அறிக்கை இல்லாததால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தன.

உண்மையாகவே உடல்நிலை பிரச்சினை தான் காரணமா? அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா செய்தாரா? என்ற கேள்விகள் எழுந்தன. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து ஜெகதீப் தன்கர் எங்கு உள்ளார் என்பது கூட தெரியாத அளவிற்கு இருக்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம்
இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். ஜெகதீப் தன்கர் வீட்டை சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவர் வலுக்கட்டாயமாக பணியை விட்டு விலக வைக்கப்பட்டுள்ளார் என்றும் பணிவிலக நிர்பந்திக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தெரியவில்லை எனவும் தெரிவித்தார். ஜெகதீப் தன்கர் நிலை என்ன என்பது கூட தெரியவில்லை என திருமாவளவன் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?