தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளின் போது, ஒரு சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் சட்டவிரோதமாக திரைப்படம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் யுவராஜ் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். இது தேர்தல் பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும், அரசு வசதிகளை தனிப்பட்ட பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதன் அபாயங்களையும் எடுத்துக்காட்டுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறை என்பது மிகவும் உணர்திறன் வாய்ந்த இடம். அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் ஸ்ட்ராங் ரூம், எண்ணிக்கைப் பகுதி உள்ளிட்ட இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த அறையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கு எந்தவித தனிப்பட்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது. ஆனால், சிசிடிவி அமைப்பை பராமரிக்கும் பொறுப்பில் இருந்த யுவராஜ், இந்தக் கட்டுப்பாட்டு அறையை தனது சொந்த பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.அவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தை அங்கு அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகளில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் ஜனநாயகன் படம் பார்த்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஓட்டுப்பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்றுதான் என சமூக வலைதளங்களில் அவரே இதனை பதிவிட்ட நிலையில் ஒப்பந்த ஊழியராக இருக்கும் யுவராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தை நானும் பார்த்தேன்..! வாயை கொடுத்து மாட்டிய பி.டி. செல்வகுமார்..!