சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 300 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்போது சுமார் 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தினசரி சுமார் 2.05 கோடி பயணிகளுக்கு சேவை செய்கின்றன. இந்த புதிய 300 பேருந்துகள் மாநிலத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 300 பேருந்துகள் அந்த திசையில் ஒரு முக்கிய அடியாகக் கருதப்படுகிறது. இந்த தொடக்க விழா முதலமைச்சரின் 52வது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய பேருந்துகள் சென்னைக்கு முன்கூட்டியே கொண்டு வரப்பட்டதால், அவை சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதிகாரிகள் தரப்பில், மொகரம் பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்து சேவைகள் தேவைப்பட்டதால் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று சேவை தொடங்கியதால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அரசின் முயற்சிகளில் ஒன்றாகும். 300 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததை தொடர்ந்து பெரம்பூருக்கு இயக்கப்படும் புதிய பேருந்தில் ஏறி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்ததுடன் முதலமைச்சர் விஜய் 29A பெரம்பூருக்கு செல்லும் பேருந்தில் ஏறி பயணித்தார்.
இதையும் படிங்க: காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!
300 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் அப்படியே பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சிரமப்பட்டதாக தகவல்கள் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல், ஏற்கனவே தாமதமான நிகழ்ச்சியை விரைந்து முடிக்காமல் முதல்வர் பேருந்தில் ஏறி வீடியோ எடுக்க, வெளியில் சுமார் 30 நிமிடங்கள் கடற்கரை சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை என்று மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், ஏன் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா என்ற காவலரிடம் ஒருவர் வாக்குவாதம் செய்த சம்பவத்தையும் சுட்டி காட்டினார். இந்த கேள்வி காவலருக்கானது மட்டும் அல்ல., முதல்வருக்கானது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!