ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமணம் மோசடி செய்ததாக நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்று பரபரப்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி பல்வேறு பரிந்துரைகளைக் காவல்துறைக்கு வழங்கி இருந்தது. மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து வழக்கும் நிலுவையிலிருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகாரை ஜாய் கிரிசில்டா அளித்துள்ளார். அதில் இதுவரை மாதம்பட்டி ரங்கராஜ் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தியது தொடர்பாக விரிவாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி என்பவர் தூண்டுதலின் பெயரில் தனது முன்னாள் கணவர் ஃபிட்ரிக் மூலமாக மகனைக் கஸ்டடி கேட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை தனது முன்னாள் கணவர் மகனின் கஸ்டடியை கேட்காத நிலையில் இவர்கள் தூண்டுதலின் பெயரில் இவ்வாறு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வரும் பிப்ரவரி 2026 ஆம் தேதி வரை தற்போது வசிக்கும் வீட்டு வாடகை ஒப்பந்தம் இருக்கும் நிலையில், இந்த மாதமே வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “டெல்லி காற்று மாசு… ‘10 மாதத்துல சரி செய்ய முடியாது!’ – முன்னாள் அரசை குற்றம்சாட்டிய ஆளும் கட்சி”
இந்தச் சூழ்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் வாடகை ஒப்பந்தத்தை நீட்டிக்க உதவ வேண்டும் எனவும், இல்லை வேறு வீடு தனக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவின் மூலம் வைத்துள்ளார். மகன் படிப்பு மற்றும் கைக்குழந்தையை கருத்தில் கொண்டு இந்த வீட்டில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் பட்டியலிட்டு புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பி.என்.எஸ் 173-ன் கீழ் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். பி.என்.எஸ் பிரிவு 90 பிரதான குற்றமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒரு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். மருத்துவ, டிஜிட்டல் மற்றும் நிதி ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவர்கள், அண்டை வீட்டார்கள், ஓட்டுநர் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். டி.என்.ஏ பரிசோதனை தொடங்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தனது புகார் மனுவில் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘பேசணும்… கம்முனு இருக்கக் கூடாது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை