கணவன் மனைவி இருவரும் விரும்பினால் பலருடன் சேர்ந்து வாழலாம் என்பதாக என்று தலைப்பிட்டு ஒரு நாளிதழ் கூறியுள்ளது. நமது சமுதாயம் எவ்வளவு சீர்கேட்டை நோக்கிச் செல்கின்றது என்பதை உணரமுடிகிறது. தியானம் என்பது அனைத்து சமயத்தினருக்கும் இறைவனைப் பிரார்த்திப்பதற்கான ஒரு நுட்பமாகும் என நெல்லை மாவட்டம்
பாபநாசத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசத்தில் யோகிஸ் பதிப்பகம் மற்றும் யோகிஸ் நூலகம் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் புத்தகங்களை வெளியிட்டுப் பேசினார்.
அவர் பேசும் போது, சமீபத்தில் ஓர் இஸ்லாமிய பெரியவருடன் பேசும் போது தொழுகையின் போது மனதை ஒருமுகப்படுத்தி தொழுகை செய்ய முடியவில்லை என்று கூறினார். மனம் ஒருமைப்படாமல் இருப்பது என்பது அனைவருக்குமான ஒர் பிரச்சினைதான்.
தியான மார்க்கம் என்பது குறிப்பிட்ட மார்க்கத்திற்கு உரியது கிடையாது. தியானத்தை ஒரு இஸ்லாமியர் உள்வாங்கிக் கொண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தொழுகையை மேற்கொள்ளலாம். இது அனைவருக்கும் பொருந்தும் என்பது என் கருத்து.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்... பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!
நமது தேசத்திற்கான ஒரு பாரம்பரியம் உள்ளது. அறம் சார்ந்த வாழ்க்கையை நம்பி வருகிறோம். இன்று வெளி வந்த ஓர் நாளிதழிலில் வெளியான கட்டுரை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அந்தக் கட்டுரையில் கணவன் மனைவி இருவரும் விரும்பினால் பலருடன் சேர்ந்து வாழலாம் என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதை நெறிமுறை என்று தலைப்பிட்டு கூறியுள்ளது. நமது சமுதாயம் எவ்வளவு சீர்கேட்டை நோக்கிச் செல்கின்றது என்பதை உணரமுடிகிறது. நமது சமுதாயத்திற்கு அடிப்படையாக உள்ளது குடும்ப வாழ்க்கை தான். குடும்ப வாழ்க்கையை காப்பற்ற வேண்டுமானால் தியான வாழ்க்கையோடு இயைந்து நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் யோகிச் தியான மைய நிறுவனர் யோகிஸ் ராஜா எழுதிய சிவ ரகசியம், எது முக்தி?, சரஞானம், வள்ளலாரின் உபதேசங்கள், மூளையின் அதிர்வுகள், சகுனங்கள், துக்கம் ஏன்?, ஒரு சாட்சி உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராப்ர்ட் ப்ரூஸ், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் உறுப்பினர் இசக்கி சுப்பையா, தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிபதி K.N.குரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.10.62 லட்சம் கோடிப்பே!!! அம்மாடியோவ்!! தாறுமாறாக அதிகரிக்கும் தமிழக அரசின் கடன்! இடைக்கால பட்ஜெட்?!