தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், மறைந்த கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுத் தந்திருக்கிறார். மேலும், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சருக்கு துணையாகச் செயலாற்றி வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...

நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் ஒரு ஜூன் ஒன்றாம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும், மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மே பிறந்தும் வழி பிறக்கலையே! மாணவர் சேர்க்கையை நிறுத்த திட்டமா? லெப்ட் ரைட் வாங்கிய ராமதாஸ்!