பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.

மேலும் 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கபடி போட்டிகள் அக்டோபர் 23 அன்று தொடங்கி, 31 வரை நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் வென்றுள்ளது. இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: பஹ்ரைனில் நடந்த கபடி போட்டியில் தங்க பதக்கங்கள்... நமக்கெல்லாம் பெருமை... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!
ஆடவர் விளையாட்டு பிரிவில் அபினேஷ் மோகன் தாஸ் என்பவர் இந்திய அணையில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவும், அபினேஷும் சென்னை திரும்பினார். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய வீராங்கனை கார்த்திகா, தமிழக அரசுக்கும் தனது பயிற்சியாளர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் தனது நன்றியை கார்த்திகா தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பஹ்ரைனில் நடந்த கபடி போட்டியில் தங்க பதக்கங்கள்... நமக்கெல்லாம் பெருமை... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!