மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் கிலோ ஒன்றுக்கு இன்று முதல் 25 சதவீதம் உயர்வு என கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் தனி சுவை உண்டு இங்கு சுமார் 120 மேற்பட்ட கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் உள்ளனர். மேலும் இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவில்பட்டி கடலை மிட்டாய் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு புவிசார் குறியீடு பெற்றதை தொடர்ந்து வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரித்து விற்பனை அதிகரித்து உள்ளது . இந்நிலையில் கடலை மிட்டாய் உற்பத்திக்கு தேவைப்படும் கடலை ,வெல்லம், போன்ற மூலப் பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதாகவும் கடலைமிட்டாயை பேக்கிங் செய்யும் பொருட்களும் விலையேற்றம் காரணமாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?
இந்த கூட்டத்தில் மூலப் பொருட்களான கடலை வெல்லம் விலையேற்றம் காரணமாகவும் கடலை மிட்டாய் பேக்கிங் செய்யும் பேக்கிங் கவர் விலையேற்றம், மேலும் பணியாளர்களின் ஊதியம் உயர்வு உள்ளிட்ட காரணமாக தற்போது இந்த கடலை மிட்டாயை விலை உயர்வை அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
அதன்படி ஒரு கிலோ 220 விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாய் 25 சதவீதம் உயர்த்துவதாக முடிவெடுக்கப்பட்டது.அதன்படி இன்று முதல் கடலை மிட்டாய் கிலோ ஒன்றுக்கு 25 சதவீதம் விற்பனை அதிகரிப்பதாக கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் கடலைமிட்டாயை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு கோவில்பட்டி கடலை மிட்டாய் சத்துணவுடன் சேர்க்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையை அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையிலும் முன் வைத்தனர். ஏற்கனவே சர்க்கரை, அரிசி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்திருப்பது பொதுமக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆசையா.. காதலி கொடுத்த லிப்ஸ்டிக் முத்தம்❤️.. குவாலியரில் உலா வந்த 'கிஸ்ஸிங் கார்'.. காதலனுக்கு நடந்த ட்விஸ்ட்!!