தமிழ் பிடிக்காத, தமிழ்நாட்டு வளர்ச்சி பிடிக்காத, தமிழக ஆளுநர் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி தராமல் வைத்திருந்தது கண்டிக்கத்தக்கது.
தற்போது குடியரசுத் தலைவருக்கு இம் மசோதா அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ,மாற்று திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயும் மாணவன் திட்டத்தை திருவிடைமருதூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் இன்று தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியஉயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வார்த்தைக்கு மாறாக யாரும் தட்டாமலும் யாரும் கேட்காமலும் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்தி வருகிறார் தமிழக முதல்வர் என்றும், 70 வயதுக்கு மேற்பட்ட குடும்ப தலைவர்கள் உள்ள இல்லத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் உள்ள இல்லத்திற்கும் மாதாந்திர ரேஷன் பொருட்கள் அவரவர் இல்லம் தேடி வழங்கும் தாயுமானவன் திட்டத்தை தமிழக முதல்வர் இன்று துவக்கி வைத்துள்ளார். இத்திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மூட்டை மூட்டையாக சிக்கிய பணம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம்? லோக்சபாவில் தீர்மானம்..
மேலும் வழக்கமாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கரும்பு ,வாழை ,பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வருடம் நெல் சாகுபடிக்கு சென்றுள்ளனர். இதனால் நெல் உற்பத்தி அதிகரித்தது. இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில் இன்றிலிருந்து போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இருப்பு இல்லை என்ற நிலை உருவாகும் என்றும் அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தமிழ் பிடிக்காத, தமிழ் வளர்ச்சி பிடிக்காத, தமிழ் நாகரீகம் பிடிக்காத தமிழக ஆளுநர் ஒப்புதல். வழங்காமல் காலம் தாழ்த்திய செயல் கண்டிக்கத்தக்கது . தற்போது ஆளுநர் கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார் . விரைவில் மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும். கிடைத்ததும் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அமைச்சர் கோவி செழியன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! கோடிக்கணக்கில் போனஸா.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த OpenAI..!!