கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
கடந்த 27- ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு வந்தார். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் இன்று கரூர் சென்றடைந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமான மூலம் வந்த கமலஹாசன் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார். இவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: “இனி எந்த நிகழ்ச்சியும்...” - விஜய் எடுத்த அதிரடி முடிவு... தவெக மா.செ.க்களுக்கு திடீர் உத்தரவு...!
கோவையில் இருந்து கரூர் சென்ற கமல் ஹாசன் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் இடத்தை பார்வையிட்டார். அதன் பிறகு, உழவர் சந்தை பகுதியை பார்த்தார். பின்னர், சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமி படத்தை பார்வையிட்டார்.
அதன் பிறகு வேலுச்சாமிபுரத்தில் உயிரிழந்த குரு விஷ்ணு என்பவரது வீட்டிற்குச் சென்ற கமல் ஹாசன் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உதவித் தொகையாக ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
அதன் பிறகு கரூர் காவலர் குடியிருப்பில் உயிரிழந்த சுகன்யா இல்லத்திற்குச் சென்ற அவர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இதையும் படிங்க: கட்சி தொண்டன் இப்படித் தான் செருப்பு வீசுவானா? - ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த்...!