பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் திருத்தலம் விளங்கக்கூடிய காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் என்றாலே கோவில்களின் நகரம் என்பதுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இங்கு சைவ சமயத்தின் 5 முக்கிய தலங்களான பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது உலக புகழ்பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் ஆகும். திருக்கச்சியேகம்பம் என்று புராணங்களால் போற்றப்படும் இந்த கோவில் தனது தொன்மையும், வரலாற்று சிறப்பையும் ஆன்மிக அற்புதங்களையும் கொண்டு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் 29 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி பந்தகால் முகூரத்தம் நடைபெற்றது இன்று அதிகாலை 3 மணிக்கு ஏகாம்பரநாதர் கோவிலில் யாகசாலை மண்டபத்தில் யாகபூஜை பூர்ணாஹூதி, யாத்ராதான சங்கல்பம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது 6.15 மணிக்கு இராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது 6.20 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது
அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ கோஷங்கள் முழுங்க சாமி தரிசனம் செய்தனர். 70-க்கும் அதிகமான சிவாச்சாரியார் வாத்தியங்கள் முழங்க மேலதாலங்களுடன் இந்த கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைந்து பள்ளிகள் மற்றும் கோவிலை சுற்றி அருகாமையில் உள்ள கிராமம் பள்ளிகள் என 149 பள்ளிகள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்தும் லட்ச கணக்ன பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்த 800 காவல் துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜகோபுரம், ஆயிரம் கால் மண்டபம் என அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!
இதையும் படிங்க: 2026 தேர்தல் கூட்டணி... இரவோடு இரவாக அதிரடி அறிவிப்பு... திடீர் ட்விஸ்ட் கொடுத்த டிடிவி தினகரன்...!