தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் முதன்மையானது கந்த சஷ்டி திருவிழாவாகும் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 28 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!
இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவித்துள்ளார். மேலும் விடுமுறை அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை செலாவணி முறிச் சட்டம் (Negotiable Instruments Act, 1881) படி பொது விடுமுறை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக 2025 நவம்பர்T 8ஆம் தேதி (இரண்டாம் சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காசாவில் அமலுக்கு வந்தது போர் நிறுத்தம்..! வீடுகளை தேடிச்செல்லும் பாலஸ்தீனிய மக்கள்..!!