பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக தீங்கு இழைப்பவர்களுக்கு இது போன்ற தீர்ப்பு அவசியம் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இன்று நீதி கிடைத்துள்ளதாகவும் திமுக அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக பேசினார். அப்போது அதிமுக அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்தார். முந்தைய அதிமுக அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளை பாதுகாத்ததாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டதற்கு அப்போது எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: பிரமாண்டமாக தொடங்கியது " முதல்வர் பாராட்டுவிழா"! கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்...