இன்றைய இளம் தலைமுறைக்கு போதைப்பொருட்கள் என்பது வெறும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல, அவர்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போதைப் புழக்கத்தில், OG கஞ்சா என்பது உயர்தர, தூய்மையான அல்லது அசல் வகை கஞ்சாவைக் குறிக்கும். இது வெளிநாட்டு செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டு, அதிக THC அளவைக் கொண்டிருக்கும். 
போதைப் பொருள் புழக்கத்தின் விளைவுகள் ஆபத்தானவை. உடல்நலம் ரீதியாக, OG கஞ்சா போன்ற உயர்தர வகைகள் THC அளவு அதிகமாக இருப்பதால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. குறிப்பாக 17 வயதுக்கு முன் தொடங்கினால், நினைவாற்றல் குறைவு, மனநோய், மனச்சோர்வு போன்றவை ஏற்படும். இளம் வயதில் உட்கொள்ளல் மூளையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது பள்ளி தோல்வி மற்றும் வேலையின்மைக்கு வழிவகுக்கிறது. சமூக ரீதியாக, இது குடும்பங்களை சீரழிக்கிறது. பெற்றோர்களின் போதை பழக்கம் குழந்தைகளுக்கு மரபணு ரீதியாகவும் பரவுகிறது. 

கஞ்சா புழக்கம் இளம் தலைமுறை இடம் குறிப்பாக பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம். இந்த நிலையில் செங்குன்றம் அருகே இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 2 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தல் தொடர்பாக லாரி ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சரக்கு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட இரண்டு கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியுள்ளது.
இதையும் படிங்க: 23 வயது பெண் செய்த அசிங்கம்... பார்த்ததும் ஆடிப்போன போலீஸ் 
சரக்கு வாகனத்தின் அடிப்பகுதியில் அறை அமைத்து 150 சிறிய சிறிய பண்டல்களாக கட்டி கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இதையும் படிங்க: பாய்ந்தது போக்சோ... சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது...!